Thursday, June 14, 2012

June 15, ஃப்ளாஷ் பேக்

யோவான் 21:1-14


அப்பொழுது அவர் நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார், அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். - யோவான் 21:6


நாம் நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொடுக்கும் போது அவர்கள் மீண்டும் நம்மை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அந்தப் பொருட்களை வாங்குகிறோம். நமக்கும் வந்த நினைவுப் பரிசுகளைப் பார்த்ததும் அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் அல்லது சம்பவங்களை அசை போட்டுப் பார்க்கிறோம்.

இயேசுவும் அவரது சீஷர்களுக்கு இவ்வாறாக ஒரு நினைவுப்பரிசைக் கொடுத்தார். ஒரு காலத்தில் அவர்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்த போது அற்புதமாக அதிக மீன்கள் பிடிக்கச் செய்து அவற்றை விட்டுவிட்டு மனிதர்களைப் பிடிக்கிறவர்களாவதற்காக அவரைப் பின்பற்றி வர வேண்டும் என்று சொன்னார். ஆனால் இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்குப்பின், என்ன செய்வது என்ற தெளிவு இல்லாமல், நம்பிக்கை எல்லாமல் தனக்குத் தெரிந்த மீன்பிடித்தலுக்கே போகலாம் என்று பேதுரு முடிவு செய்ய மற்றவர்களும் அவரைப் பின்பற்ற முடிவு செய்தார்கள்.

ஆனால் பின் வாங்கிப் போனவர்களை உணர்த்துவதற்காக முன்பு நடந்த அதே அற்புதத்தை (மீன்களை) மீண்டும் செய்கிறார் இயேசு. நினைவுப்பரிசாகிய மீன்கள் அவர்களுக்கு உணர்வைத் திரும்பத் தந்தது. இயேசு அவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ இல்லை. மீண்டும் அவர்கள் மறக்காத அளவுக்கு ஒரு பெரும் அடையாளத்தைக் காட்டினார். இரவு முழுவதும் போராடியும் கிடக்காத மீன்களை இயேசுவின் சொற்படி வலதுபுறமாகப் போட்ட போது அதிகமான மீன்களைப் பிடித்தார்கள். இயேசு நம்மை உணர்த்தும் போதும் கூட அற்புதமாக, மென்மையாகவே உணர்த்துகிறார். அவரது கோபத்துக்கு முன் நாம் நிற்க முடியாது என்பதால் அவர் நம்ம மென்மையாக நடத்துகின்றார்.


சிந்தனை : ஞாபகசக்திக்கு மருந்து இயேசுவின் அற்புதங்களே. மறதிக்கு தண்டனை கிடைப்பதில்லை, பரிசு தான் கிடைக்கின்றது.


ஜெபம் : இயேசுவே உம்மை விட்டுப் பின்வாங்கிச் சென்றுவிடாதபடி அற்புதமாக என்னை உணர்த்தும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: