எரேமியா 5
இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.
- எரேமியா 5:14
ஒரு நகரத்து ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் நடுவில் நன்றாக உடையணிந்திருந்த ஒரு நபர் எழுந்து நின்று உரத்த சத்தமாகப் பேசினார். ”கடவுளிடத்திலிருந்து நான் ஒரு வார்த்தையைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று சொன்ன அவரை ஆலயத்தின் முக்கிய உறுப்பினர்கள் வேகமாகப் பிடித்து வெளியே தெருவில் கொண்டு போய் விட்டார்கள். ஒரு பெரும் வேதாகமக் கல்லூரியின் பேராசிரியர் இந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லும் போது, ”இதில் ஒரு பெரும் முரண் இருக்கின்றது. வாராவாரம் போதகர் கடவுளிடமிருந்து வார்த்தையைக் கொண்டுவருவதாகச் சொல்லும் போது சும்மா கேட்டுக் கொண்டு இருக்கும் திருச்சபையினர் ஒரு சாதாரண நபர் அதே வார்த்தையைச் சொன்னால் அதிர்ச்சியடைகிறோம்.”
எதிர்பாராத வார்த்தைகள் எதிர்பாராத நிலையிலிருந்து வரும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம். அதைத் தடுக்கிறோம். எரேமியாவின் வார்த்தைகள் கடவுளிடமிருந்து வந்தவைகள். ஆண்டவர் அவற்றை அக்கினியாகவும், இஸ்ரவேல் மக்களை விறகாகவும் ஆக்கி அந்த அக்கினி பற்றி எரியச் செய்வதாகச் சொல்கிறார்.
ஆண்டவரைத் தங்களுக்குச் சொந்தமானவர் என்று சொல்லிக் கொண்டு அவரது வார்த்தையாகிய வேதாகமத்தையும் வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அதே ஆண்டவரின் வார்த்தையே எரித்துப் போடும். அவருக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறவர்களுக்கோ, அவர்களது பாவங்களையும், அசுத்தங்களையும் எரித்து சுத்தப்படுத்தும் தீயாகவும் அதே வசனம் இருக்கும்.
சிந்தனை : ஒரே தீ தான், அழிக்கவும் செய்யும், சுத்தப்படுத்தவும் செய்யும். முடிவு நம் கையில்.
ஜெபம் : கர்த்தாவே உமது வார்த்தையாகிய வேதாகமத்தை எனக்கு எதிராக அல்ல, எனக்கு சாதகமாக என்னைப் பரிசுத்தமாக்கும் அக்கினியாகப் பயன்படுத்த என்னைப் பக்குவப்படுத்தும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment