எரேமியா 12
ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? - எரேமியா 12:1
அதிகமான பொறுப்பும், லஞ்சம் வாங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ள ஒரு மத்திய அரசாங்க அதிகாரி பணின்அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். “முதலில் நேர்மையாக இருந்ததற்காக என்னைப் பாராட்டினார்கள். பின்னர் என்னால் தங்களுக்கு லஞ்சம் கிடைக்காததால் திட்டினார்கள். ஒதுக்கி வைத்தனர். பின்னர் மிரட்டினார்கள், துன்புறுத்தினார்கள். இப்போது நேர்மையாக இருப்பதற்காகத் தண்டிக்கிறார்கள்”
தீயவர்களின் வளர்ச்சியையும் வளமையையும் கண்டு நல்லவர்களும் யோசிக்கிறார்கள். நான் மட்டும் நல்லவனாக இருந்து என்ன பயன், என் குடும்பத்துக்காக, என்னை சார்ந்திருக்கிறவர்களுக்காகவாவது, தீமையைக் கண்டு கொள்ளாமல் போய்விடலாம் என்று நினைக்கிறார்கள். பண நெருக்கடியோ, ஆபத்தோ வரும்போது தீமையைச் செய்யும்படி சோதிக்கப்படுகிறார்கள்.
எரேமியா கடவுளிடம் என்னைவிட தீயவர்கள் என்னைவிட நன்றாக இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டுக் கேள்வி கேட்கிறார். ”கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்,” ஏன் தீயவர்கள் செழித்திருக்கிறார்கள் என்று குழம்பிக் கேட்கிறார்.
”நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்?” என்று கேட்கும் ஆண்டவர் எதிர்காலத்தில் இன்னும் சோதனைகள் உண்டு ஆனால் நம்பிக்கையும் உண்டு என்று சொல்கிறார், ”என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்” என்று தனது நியாயத்தீர்ப்பைப் பற்றியும் கூறுகின்றார்.
சிந்தனை : தீயவர்களின் செழிப்பை இன்று பார்க்கிறோம், அவர்கள் அழிவைப் பற்றி நினைத்துப்பார்த்தால், அது நம்மை உறுத்தாது.
ஜெபம் : கர்த்தாவே நீர் நீதியுள்ளவர் அதை மறக்காமல் வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment