Sunday, June 10, 2012

June 11, நம்பவே மாட்டேன்

யோவான் 20:1-9


கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை - யோவான் 20:2


இயேசு தம்மை ஏற்றுக் கொள்ளாத மதக்குருக்களிடமோ, ரோம வீரர்களிடமோ தன்னை வெளிப்படுத்தாமல் ஏன் தனது சீஷர்களுக்கு மட்டும் உயிர்த்தெழுந்த தம்மை வெளிப்படுத்தினார்? என்ற கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலையும் தருகிறார் கிறிஸ்தவ எழுத்தாளர் ஃபிலிப் யான்சி. இயேசு தனது உயிர்த்தெழுதலை நிரூபித்திருந்தாலும் மதத்தலைவர்களும் ரோமர்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதை தவறு நிரூபிக்கத் தான் முயற்சி செய்வார்கள். ஆனால்ல் பயந்து அற்ப விசுவாசத்தோடு இருந்தாலும், அவரைப் பின்பற்றிய சீஷர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டால் தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்காமல் அவரைப் பற்றிப் பிறருக்குச் சொல்வார்கள் என்பதால் தான் அவர் தன்னைப் பலவீனமான தனது சீஷர்களுக்குக் காட்டினார்.

இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாத சீடர்களிடம் தான் தன்னை உயிரோடு இருக்கிறவராகக் காட்டினார் இயேசு. அதனால் தான் அவர்களது விசுவாசம் மிகவும் உறுதியானதாக மாறியது. பிற்காலத்தில் அவர்களில் பலர் இரத்த சாட்சிகளாகத் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் கூட இயேசு உயிரோடு எழுந்தார் என்ற உண்மையைச் சொல்லி அதற்காக மகிழ்ச்சியாகத் தங்கள் உயிரையும் விட்டார்கள். மேலும் பொய்க்காக யாரும் உயிரை விடமாட்டார்கள். உண்மைக்காகத் தங்கள் உயிரையும் விட ஆதிக்கிறிஸ்தவர்கள் ஆயத்தமாக இருந்தார்கள்

நம் வாழ்விலும் பல சந்தேகங்கள், கேள்விகள் எழலாம். ஆனால் நமது விசுவாசம் உறுதிப்படும்படி இயேசு நமக்கு உதவி செய்கிறார்.


சிந்தனை : சந்தேகங்களும் குழப்பங்களும் இயேசுவை சந்தித்தபின் நமது பலங்களாகவும், ஆற்றலாகவும் மாறுகின்றன.


ஜெபம் : ஆதியும் அந்தமுமானவரே, உம்மை உறுதியாய் நம்ப, எனக்கு உமது பலத்தைத் தாரும். என் அற்பவிசுவாசத்தைப் பெருக்கி அசையா விசுவாசத்தை எனக்குள் ஊற்றும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: