Tuesday, June 5, 2012

June 5, கொக்கரக்கோ

யோவான் 18:15-27


பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று. - யோவான் 18:27


குற்ற மனசாட்சியானது நம்மை அழித்துவிடக்கூடும். உதாரணமாக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் தன்னைய அழித்துக் கொண்டார். ஆனால் பேதுருவின் மனசாட்சியானது அவரை மனங்கசந்து அழுது இயேசுவிடம் கொண்டுவந்தது. முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வில்லியம் க்ளாட்ஸ்டோன் என்பவர் தனது இரகசிய அறையில் பலவிதமான சாட்டைகளை வைத்துக் கொண்டு தன்னைத் தானே அவர் தண்டித்துக் கொண்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. பலர் மது மற்றும் போதையின் மூலமாகத் தங்கள் குற்ற உணர்ச்சியைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால் குற்ற மனசாட்சியை அமைதிப்படுத்த நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவை நோக்கிச் சென்று நமது குற்றத்துக்காக மனம் வருந்தி இனிமேல் புதிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என்று சொல்வது தான்.

பேதுரு தனது குற்றத்தை உணருவதற்கு சேவலின் கூவல் உதவியாக இருந்தது. இந்த சேவல் கூவுதல் என்பது ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட காலத்தை உணர்த்த ஊதும் எக்காளம் என்று சிலர் சொல்கிறார்கள். எப்படியாக இருந்தாலும் இயேசு முன்பதாகவே தீர்க்கதரிசனமாகச் சொன்னதை உணர்ந்த பேதுரு தன் இருதயத்தைக் கடினப்படுத்தாமல் மனம் கசந்து அழுது மீண்டும் இயேசுவுடனான உறவையும் புதுப்பித்து தனது வாழ்க்கையில் மாற்றத்தையும் பெற்றுக் கொண்டார். நாமும் இவ்வாறு தவறி விழுவோம் என்று இயேசுவுக்குத் தெரியும். ஆனால் அவரது எச்சரிக்கையான வேதவசனங்கள் நம் மனதில் சேவலைப் போலக் கூவும் போது உடனடியாக மனங்கசந்து அழுது அவரிடம் சேர்ந்தால் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.


சிந்தனை : மனசாட்சி என்னும் சேவல் கூவும் போது அதைக் கொன்றுவிட்டால், சாத்தான் என்னும் சிங்கம் நம்மைக் கொன்றுபோடும்.


ஜெபம் : ஆவியானவரே, உமது உணர்த்துதல்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும் உணர்வுள்ளதாக என் இருதயத்தை மென்மையாக்கும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: