Monday, April 9, 2012

April 10, ஃப்ரண்ட்ஷிப் அடி

நீதிமொழிகள் 27


சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.- நீதிமொழிகள் 27:6


நாம் அபாயகரமான பழக்கங்களிலோ, உறவுகளிலோ விழுந்து போகாமல் இருக்க நண்பர்கள் எச்சரிக்கிறார்கள்.

நல்ல நண்பர்கள் தங்கள் நண்பர்கள் நரகத்துக்குப் போகக்கூடாது என்று விரும்புவார்கள். என்றெல்லாம் கேள்விப்பட்டிருகின்றோம். ஒரு அறிஞர் நல்ல நண்பனைப் பற்றி இவ்வாறு சொல்கிறார், “அவன் நல்ல நண்பன் அவன் நேருக்கு நேராகக் குத்துவான். முதுகில் குத்தமாட்டான்.“

சிநேகிதனும் சத்துருவும் இருதயத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதுவே முக்கியமாகும். சாதாரணமாக எதிரிகளிடம் அடியையும் நண்பர்களிடம் முத்தத்தையும் நாம் எதிர்பார்ப்போம். ஆனால் உள்ளத்தில் வேறொன்றை வைத்துக்கொண்டு வெளியே அதற்கு எதிரான செயலைச் செய்வது தான் நமக்குக் குழப்பமாக இருக்கின்றது. நம் நண்பன் நம்மை அடிப்பது அல்லது கண்டிப்பது நம் நன்மைக்குத் தான் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் எதிரியின் முத்தத்தில் ஏமாந்து நாம் அழிந்து போய்விடுவோம். ஆகவே நம்முடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு கடவுளின் உதவி கண்டிப்பாக அவசியம். ஏனென்றால் கடவுள் ஒருவர் தான் ஒவ்வொரு மனிதனுடைய மனதின் எண்ணங்களையும் அறிந்திருக்கிறவர்.


நம் கடவுளும் நம்மைத் தனது சிநேகிதர்கள் என்று சொல்கிறார். அவரது வார்த்தைகளாகிய வேதவசனம் நாம் வழி தவறிப்போகும் போது நம்மைக் கண்டித்து உணர்த்துகின்றன. ஏனென்றால் வேதவசனங்கள் உண்மையானவைகளாகும்.


சிந்தனை : உண்மையான அடிகளையும், ஏமாற்றும் முத்தங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரிந்துவிட்டால் நல்ல சிநேகிதனாக நீங்கள் இருக்க முடியும்.


ஜெபம் : நேசர் இயேசுவே, உம்மைப் போல நல்ல சிநேகிதனாக, உயிரையும் தருவதற்கு ஆயத்தமாக, தவறைக் கண்டித்து உணர்த்துகிற நட்பை எங்களுக்குள் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: