நீதிமொழிகள் 26
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.- நீதிமொழிகள் 26:4-5
இந்த வசனம் தங்களைக் குழப்புவதாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். இன்று இதற்கு ஒரு முடிவு கண்டுவிடலாம். முதலாவதாக இந்த வசனத்தில் மூடன், நாம், மறு உத்தரவு அல்லது பதில், ஞானி என்ற எண்ணம் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. இதில் நாம் ஞானமுள்ளவர்கள் என்ற கருத்தில் தான் இதைப் பார்க்க வேண்டும்.
முதல் நிலையில், மூடன் கேட்கும் கேள்விகளுக்கு முட்டாள்த்தனமாகப் பதில் கொடுக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படி செய்யாவிட்டால் நாமும் முட்டாள்களாக மாறிவிடுவோம். இதில் நாம் ஞானி என்பதை நிரூபிக்க வேண்டும் என்றே முடிவு சொல்லப்படுகிறது.
இரண்டாம் நிலையிலோ, மூடனுக்கு முட்டாள்த்தனமான பதிலைக் கொடு. இல்லையென்றால் அவன் தன்னை ஒரு ஞானி என்று நினைத்துக் கொள்வான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே நாம் ஞானிகள் மூடன் தன்னையும் ஞானி என்று நினைத்துக் கொள்வான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
நாம் எதைச் செய்தாலும் என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். முதலாவதாக, மூடனுக்கு முட்டாள்த்தனமாக பதில் கொடுப்பதின் மூலம் அவனைப் போலாகி அவனுடைய மூடத்தனத்தை அவனுக்கு எடுத்துக் காட்ட வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் அவனுக்கு ஞானமாகப் பதில் கொடுப்பதன் மூலம் அவன் மூடன் என்றும் ஞானமான பதில் எப்படி இருக்கும் என்றும் அவர்களுக்கு எடுத்துக் காட்டலாம். இதில் நாம் ஞானி என்று நிரூபிக்க இப்படிச் செய்தால் நாம் தான் கடைசியில் முட்டாளாகிவிடுவோம். ஏனென்றால் தன் பார்வைக்கு ஞானியாக இருப்பவன் ஒரு மூடன் என்றே நீதிமொழிகள் சொல்கிறது. தன் பார்வைக்கு ஞானியாக இருப்பவனை நாம் திருத்த முடியாது. ஆனால் திருந்தக்கூடிய அல்லது கற்றுக் கொள்ளக்கூடியவன் நமது முயற்சியால் திருந்த வழி இருக்கின்றது.
சிந்தனை : நமக்குப் பிறர் பதில் கொடுக்கும் போது எப்படிக் கொடுக்கிறார்கள்?
ஜெபம் : வார்த்தையாகிய கடவுளே, நான் யாருக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும் என்ற ஞானத்தைத் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment