Thursday, April 12, 2012

April 13, என் படி

நீதிமொழிகள் 30


நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும். - நீதிமொழிகள் 30:9

ஆசாப்-இன் நீதிக்கதைகளில் ஒன்று ஒரு கழுதையையும் குதிரையையும் பற்றிச் சொல்கிறது. பொதி சுமந்து கொண்டிருந்த கழுதை, அழகான துணியும், சேணமும் மேல் இருக்க ஒரு பணியாளர் அதை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார். நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் நின்று கொண்டிருந்த குதிரையைப் பார்த்து பெருமூச்சு விட்டது. ”நீ இருக்கிற இடத்திலே நான் இருந்தா நல்லா இருக்கும்” என்று சொன்னது. அடுத்த நாள் போர் நடந்தபோது அந்தக் குதிரை போருக்குப் போய் காயப்பட்டு இறந்து போகும் நிலையில் கீழே விழுந்து கிடந்த போது அந்த வழியே கழுதை போய்க்கொண்டிருந்தது. “நான் நேற்று சொன்னது தவறு என்றது.”

நமக்கு என்று இருக்கின்ற கடவுள் கொடுத்த இடத்தையும், பொருட்களையும் கொண்டு நாம் திருப்தியடைந்து இருக்க வேண்டும் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. படியளக்கிறது என்பது வேலை செய்தவர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பது போலத் தெரிகின்றது. படி என்பது தானியங்களை அளக்கும் ஒரு பாத்திரம் ஆகும். இதன் அளவில் தான் படிக்கணக்கில் தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ஜெபம் நமக்கு அதிகப் பொருத்தமானதாகும். நமக்கு என்று கடவுள் அளக்கும் படியைவிட அதிகமாகவோ, குறைவாகவோ நாம் வைத்திருந்தால் அது கடவுளை மறுதலிப்பதற்கும் கடவுளின் பெயரை வீணிலே வழங்குவதற்கும் தான் வழி செய்யும். ஆகவே போதாது போதாது என்று சொல்லும் இந்த உலகத்தில், இன்னும் இன்னும் என்று தூண்டும் விளம்பரங்களிலே மயங்காமல் போதும் என்ற மனதுடனே கூடிய தெய்வ பக்தியை நாடுவோம்.


சிந்தனை : அதிகம் இருப்பவர்கள் தங்கள் பொருட்களால் கடவுளை மகிமைப்படுத்த முடியும். குறைவாக இருப்பவர்களும் தங்கள் நன்றி உணர்ச்சியால் கடவுளைத் துதிக்க முடியும்.


ஜெபம் : சர்வ வல்ல கடவுளே நீர் எனக்கு வைத்திருக்கும் படியை அனுபவிக்கவும் அதற்கு நன்றியுள்ள மகனாக மகளாக நடந்து கொள்ளவும் எனக்கு பலம் தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: