நீதிமொழிகள் 23
நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. - நீதிமொழிகள் 23:2
அதிகம் சாப்பிடுவோருக்கான மறுவாழ்வு சங்கம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு அடிமைப்பட்டவர்கள் ஒருவகை வியாதியஸ்தர்கள் தான் என்னும் கருத்தில் அந்த வியாதியை சரி செய்ய வேண்டும் என்று இந்த சங்கம் உருவாகியிருக்கின்றது. சுகமாக்கப்படுவது என்பதைவிட நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக நம்மைவிட உயர்ந்த சக்தியைத் தேட வேண்டும் என்பதுவுமே இந்த சங்கத்தின் நோக்கமாகும். உடல் எடை கூடுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் சாப்பாட்டு வகைகளைப் பற்றியதல்ல; இது ஒரு தொடர் செயலாகும். வாழ்க்கை முறையாகும். நாம் யார் என்பதையும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதையும் பற்றியதேயாகும் என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.
வாழுவதற்காக சாப்பிடுதல் சரியானது ஆனால் சாப்பிடுவதற்காகவே வாழுவது என்பது சரியானதல்ல. உலக நாடுகள் சிலவற்றில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள் பஞ்சத்தில் வாடும் நாடுகளிலுள்ளவர்களுக்குப் போதுமானதாக இருக்கின்றது. சரிவிகிதமான உணவு நமக்குத் தேவையானதுவும், ஆரோக்கியமானதுவுமாகும். ஆனால் நமக்குப் பிடித்த ஒரே வகை உணவை மட்டும் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது என்பது உடல்நலத்தைப் பாதிக்கக் கூடியதாகும். சிறுவயதிலேயே பலவகையான ஒழுக்கங்களைப் படித்துக் கொள்ளும்போது சாப்பிடுவதிலும் ஒழுக்கத்தைப் பிடித்துக் கொள்வது நல்லது. இளம் வயதில் பிள்ளைகளை வைத்திருந்த ஒரு அம்மா இப்படிச் சொன்னாராம், “என் பிள்ளைகள் உடம்புக்குள்ளே அலமாரி இருப்பது போல இருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.”
சிந்தனை : உடலுக்காக சாப்பிடுங்கள், மனதுக்காகச் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டியிருக்கும்.
ஜெபம் : பரமபிதாவே, உம்மைத் தேடுவதில் எங்கள் ஆசைகள் சிற்றின்பங்களை ஒதுக்கி வைக்கவும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் உதவிசெய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment