யோவான் 5:31-47
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. - யோவான் 5:39
”எனக்கு விசுவாசம் வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு மின்னலைப் போல என் மேல் வந்து தாக்கும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு விசுவாசம் வரவில்லை. ஒரு நாள் நான், “விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வார்த்தையைக் கேட்பதால் வரும்” என்ற வசனத்தை வாசித்தேன். நான் வேதாகமத்தை மூடி வைத்துவிட்டு விசுவாசத்துக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் வேதாகமத்தை ஆராய்ந்து படிக்கத்துவங்கியிருந்தேன். அன்றிலிருந்து எனது விசுவாசமானது வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.” என்று உலகப்புகழ் பெற்ற ஊழியர் டி எல் மூடி எழுதியிருக்கிறார்.
வேத வாக்கியங்களை ஆராய்ச்சி செய்து போதித்து வந்த யூதமதத் தலைவர்களிடம் இயேசு இவ்வாறு சொல்லுகிறார். வேத வாக்கியங்களால் நித்திய ஜீவன் உண்டு. இயேசுவைப் பற்றி அவைகள் சாட்சி கொடுக்கின்றன. இயேசுவே நித்திய ஜீவனுக்கு வழி என்று வேதாகமும் சொல்கிறது இயேசுவும் சொல்லியிருக்கிறார். ஆனால் வேதாகமத்தை கரைத்துக் குடித்திருந்த அவர்களால் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் வேதாகமத்தில் இருக்கும் உயிரை வாழ்க்கையை அவர்கள் காணத்தவறி விட்டார்கள். அவர்களுக்கு வேத அறிவு இருந்தது ஆனால் வேதத்தை வாழ்ந்து காட்டத் தெரியவில்லை. வேதாகமத்தை மதிக்கத் தெரிந்திருந்தது ஆனால் வேதாமத்தின் நாயகனை அலட்சியம் செய்தனர்.
சிந்தனை : ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. வெறும் வேத அறிவு ஆன்மீக வாழ்வுக்கு போதாது.
ஜெபம் : வார்த்தையாம் கடவுளே, உம் வேதத்தைப் படிக்கிறவர்களாக மட்டுமல்லாமல் அதன்படி நடக்கிறவர்களாக எங்களை மாற்றும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment