யோவான் 5:16-30
அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். - யோவான் 5:18
பல சாமியார்களும், நான் தான் கடவுள் என்று சொல்லும் யோகிகளும் நிறைந்த இந்த நாட்டில், இயேசு யார் என்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. சிலர் அவரை ஒரு போதகர் என்கிறார்கள், குரு, யோகி, புரட்சியாளர், அவதாரம் என்றெல்லாம் பல பெயர்களில் அவர் அழைக்கப்பட்டாலும் இயேசு தன்னை தேவனுக்கு சமமாகவே நினைத்திருந்தார். தன்னை தேவனுக்கு சமமானவர் என்றே சொல்லாலும் செயலாலும் நிரூபித்துக் கொண்டிருந்தார்.
இயேசு சாதாரண தீர்க்கதரிசி தான் அவர் கடவுள் அல்ல என்று சொல்லும் பலர் குழப்பங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். இயேசு இரட்சகர் என்றால் தாங்கள் பாவி என்பதையும் பாவத்துக்கு மன்னிப்பு வேண்டும் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். மோட்சம் நரகம் ஆகியவற்றை நம்ப வேண்டியிருக்கும். இனி பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்ற கட்டளையையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தங்கள் விருப்பம் போல சிற்றின்பங்களிலும் பாவ வழிகளிலும் போக இயேசுவின் போதனைகள் தடையாக இருக்கும் என்பதால் இயேசுவை அலட்சியம் செய்கின்றனர்.
ஓய்வு நாளை உருவாக்கிய நானே அதை மீறவும் செய்வேன் என்று சொன்னதாலும், தேவனது சொந்த மகன் என்று சொன்னதன் மூலமாகவும் அவர் தன்னை தேவனுக்கு சமமாக்கினதை யூதர்கள் வெறுத்தார்கள். ஏனென்றால் தேவனது மகன் என்பவர் தேவனது எல்லா குணங்களையும் கொண்டிருப்பவராவார். யூத மதத்தின் கட்டளைகளின் படி கடவுள் ஒருவரே; எந்த ஒரு மனிதனும், உருவமும் கடவுளுக்குப் பதிலாக வணங்கப்படக்கூடாது. தான் யார் என்பதை நன்றாகத் தெரிந்திருந்த இயேசு உண்மைக்காகத் தன் உயிரைக் கொடுக்கவும் தனது தெய்வீகத்தால் மீண்டும் உயிரோடு எழும்பி வரவும் ஆயத்தமாக இருந்தார்.
சிந்தனை : இயேசு உங்கள் ஆண்டவர் என்றால் அவருக்கு முழுவதுமாகக் கீழ்ப்படிய வேண்டும். இயேசு நண்பராக இருந்தாலும், மாபெரும் ஆண்டவர் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஜெபம் : ஆண்டவரே உம்மை ஏற்றுக்கொண்ட நான் உமது பெயரைச் சொல்லும் தகுதியுடைய விசுவாசியாக வாழ உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
micyellmedia@gmail.com
Mobile : 09994258788
No comments:
Post a Comment