நீதிமொழிகள் 21
துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள். - நீதிமொழிகள் 21:17
செராம்பூரில் ஊழியம் செய்து வந்த தாமஸ் அவர்கள் ஒரு கூட்ட மக்களுக்கு கங்கை ஆற்றங்கரையில் போதித்துக் கொண்டிருந்தார். உட்கார்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் கேட்டார், “சாத்தான் தான் நம்மைப் பாவம் செய்வதற்குத் தூண்டுகிறான் என்று சொல்லுகிறீர்களே, அப்படியானால் சாத்தானுக்குத் தானே தண்டனை கொடுக்கப்பட வேண்டும்?” தாமஸ் யோசித்து உடனடியாக ஆற்றில் வந்து கொண்டிருந்த படகு ஒன்றைக் காட்டிச் சொன்னார், “அந்தப் படகில் வருகிறவர்களைக் கொன்று அவர்களிடமிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவரும்படி நான் என் நண்பர்களை அனுப்பினால், யாருக்குத் தண்டனை கொடுப்பீர்கள்?” கேள்வி கேட்டவர் பதில் சொன்னார், “அனுப்பிய உங்களையும், கொலையையும் கொள்ளையையும் செய்த உங்கள் ஆட்களுக்குத் தான்.” இப்போது தாமஸ் விளக்கினார், “அதைப் போலத்தான் சாத்தானும் அவன் சோதனையில் விழுந்து பாவம் செய்கிறவர்களும் ஒன்றாகத் தண்டிக்கப்படுவார்கள்.”
அநியாயம் என்பது எப்போதுமே தண்டனைக்குரியது. இயேசு இந்த உலகத்தில் முதலாவதாக வந்த போது இரட்சகராக, அநீதியைத் தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் தன்னை பலியாகத் தருவதற்காக வந்தார். ஆனால் அவரது இரண்டாம் வருகையோ, அவரை நீதியுள்ள நியாயாதிபதியாகவும் ராஜாதி ராஜாவாகவும் வரச்செய்யப் போகிறது. இந்த உலகத்தில் அநீதி செய்கிறவர்கள் செழித்திருப்பது போலவும் தண்டிக்கப்படாமல் இருப்பது போலவும் தோன்றினாலும் நீதியுள்ள கடவுள் அனைவருக்கும் உரிய பலனைக் கொடுப்பார்.
நியாயம் செய்வது என்பது கடவுளின் குணம். அவரைப் பின்பற்றாதவர்களுக்கு நியாயம் செய்யவேண்டும் என்ற எண்ணமே இருக்காது. அதற்கான தண்டனையையும் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
சிந்தனை : நியாயம் செய்ய மனம் வேண்டும். அதற்கு மனதில் நீதியான சிந்தனைகள் வேண்டும். வேதமே நீதியைப் போதிக்கிறது.
ஜெபம் : நீதியின் கடவுளே, நான் நீதியின் மேல் பசிதாகம் உள்ள உம் பிள்ளையாக வாழ அருள் தாரும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment