நீதிமொழிகள் 20
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20: 1
ஒரு குடிகாரனை நேரில் பார்ப்பதுவே குடிக்கு எதிரான சிறந்த பிரசங்கம் ஆகும். - ஜான் ஃபாசிட் சாவில்
குடிப்பழக்கம் என்பது தானாகவே மூடத்தனத்துக்குள் போவதாகும். - செனெகா
குடித்துவிட்டு ரோட்டு ஓரத்தில் உருளும் மக்களை மட்டுமல்ல, பார்ட்டி என்றும், ஜாலி என்றும் கும்மாளம் போடும் இளைஞர்களுக்கும் இந்த வசனம் பொருத்தமானதாகும். என்னால் இந்தப் பழக்கத்தை நினைத்த நேரத்தில் விட்டுவிட முடியும் என்பார்கள். இன்னும் சிலரோ, என் அலுவலகத்தில் பார்ட்டிக்குப் போகாவிட்டால் பதவி உயர்வு கிடையாது. குடிக்காவிட்டால் என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்றெல்லாம் காரணங்களைச் சொல்கிறார்கள்.
மது மனித மூளையின் ஒரு பகுதியை செயலிழக்கச் செய்வதால் ஒருவித மயக்க அனுபவமும், எல்லாவற்றையும் மறந்த நிலையும் ஏற்படுகிறது. ஆனால் பழக்கம் முற்றிய பின் துயரமும் பிரச்சனைகளும் தான். அரசாங்கமே விற்பதாலும் உங்களுக்கு 18 வயதாகிவிட்டது என்பதாலும், உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதாலும் நீங்கள் குடிக்கலாம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
ஞானமுள்ள யாரும் மதுவின் அருகில் போக மாட்டார்கள். எந்த ஒரு பழக்கத்தையும் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமானால், அந்தப் பழக்கத்தால் ஏற்படும் உச்ச நிலை விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பணநஷ்ட்டம், உடல் நிலையில் பிரச்சனை, மரணம், மதிப்புக் குறைவு, சண்டைகள், சிறைத் தண்டனை போன்ற விளைவுகளை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு புத்தி தெளிவாகும். மேலும் தேவனுடைய ஆலயமாக இருக்கும் நமது உடலை அசுத்தப்படுத்துவது தேவனுக்கு எதிரான பாவமாகும்.
சிந்திக்க : பலர் உணவுக்கும் தண்ணீருக்குமே தவிக்கும் நிலையில் நாம் ஜாலியாக இருக்க மதுவைத் தேடலாமா?
ஜெபம் : பேரின்ப நதியே, சிற்றின்பத்தைத் தேடாமல் உம்மைக் கண்டடைய திருப்தி பெற உதவி செய்யும். ஆமென்.
For Audio Tracks visit : DD-Tamil
No comments:
Post a Comment