Wednesday, April 4, 2012

April 5, தடையே வாய்ப்பு

நீதிமொழிகள் 22


வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான். - நீதிமொழிகள் 22:13


வெறுங்கால்பட்டி என்ற ஊருக்கு இரண்டு செருப்பு வியாபாரிகள் ஒரே நாளில் வந்தார்கள். இருவரும் அந்த ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரவில் தங்கள் தலைமை அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.

ஒருவர் சொன்னார், “சார் இந்த ஊர்ல ஒருத்தருமே காலுல செருப்பே போடாம இருக்காங்க. நாளைக்கே ஒரு லாரியில செருப்பு அனுப்பி வையுங்க. நான் ஒரு கடையை வாடகைக்குப் பார்த்திருக்கிறேன்.”

அடுத்தவரோ, “சார் இந்த ஊர்ல யாருமே செருப்புப் போட மாட்டேங்கறாங்க. நாம வியாபாரம் ஆரம்பிச்சா நஷ்ட்டம் தான் வரும்” என்று சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்.

முதலாவது நபர் தடையை வாய்ப்பாகப் பார்த்தார். இரண்டாமவரோ வாய்ப்பைத் தடையாகப் பார்த்தார். சோம்பேறிகள் தான் இந்த இரண்டாம் வகை என்று நீதிமொழிகள் சொல்லுகிறது. சோம்பல் உள்ளவன் எல்லா வாய்ப்புகளிலும் தடைகளையும், ஆபத்துகளையும் கற்பனை செய்து கொள்வான். அவனது பயம் உண்மையானது அல்ல. ஆனால் சுறுசுறுப்பு உள்ளவர்களோ தடைகளை வெல்லுவதற்கான சிந்தனையையும் செயலையும் காட்டுவார்கள்.

பயப்படாதே நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லும் ஆண்டவர், உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லும் கடவுள் இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு வாய்ப்புக்களைத் தருவதில்லை. ஒரு வேலையில் உயர் பதவியை அடைந்தவர்கள் யாவருமே தடைகள் பலவற்றை சந்தித்தவர்கள் தாம். சாக்குப் போக்கு சொன்னவர்கள் அடிமட்ட நிலையிலேயே சுருக்கு வழிகளில் சமாளித்துக் கொண்டிருப்பார்கள்.


சிந்தனை : பயம், சோம்பல், சாக்குப்போக்கு அனைத்துமே நம்மை செயல்படவிடாமல் தடுத்துவிடும்.


ஜெபம் : கடவுளே, நேர்மறையாக சிந்திக்கவும், தடைகளை வாய்ப்புக்களாக மாற்றவும் எனக்கு உடன் இருந்து வழி காட்டும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: