Sunday, April 1, 2012

March 31, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

நீதிமொழிகள் 17


மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும். - நீதிமொழிகள் 17:10


சூப்பர் ஸ்டார் பச்சைக் குமாரின் விசிறி ஒருவன் டீக்கடையில் உட்கார்ந்திருந்தான். அருகில் ஸ்டார் மஞ்சை ராசுவின் விசிறி ஒருவன் உட்கார்ந்திருந்தான். பச்சை விசிறி மஞ்சை விசிறியிடம் கேட்டான், “நான் பச்சைக்குமார் ஜோக் ஒண்ணு சொல்லட்டுமா?” மஞ்சை விசிறி சொன்னான், “இதோ இங்கே இருக்கிற நாலுபேரும் மஞ்சை விசிறிகள் தான். 90 கிலோ, 100 கிலோ எடை உள்ளவங்க. ஆறு அடி உயரத்துக்கு குறைஞ்சவங்க யாருமே இல்ல. எல்லாரும் ஜிம்முக்குப் போய் உடம்ப கல்லுமாதிரி வச்சிருக்கோம். இனிமே ஜோக் சொல்லணும்னா சொல்லு.” பச்சை விசிறி சொன்னான், “ஐயையோ, ஒரே ஜோக்கை நாலு தடவை சொல்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லீங்க.”

புத்திமானுக்கு வார்த்தை போதும் ஏனென்றால் அவன் சிந்திக்கிறவன். சிந்தித்து செயல்படுபவன். மூடன் சிந்திப்பதைவிட உடல் அளவிலான இன்பங்களை அதிகமாக நினைப்பவன். ஆகவே அடி அவனுக்கு வலியையும் பிற சிற்றின்பங்கள் அவனுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். புத்திமானோ தனது உடல் சம்பந்தமான மகிழ்ச்சி மற்றும் வலி ஆகியவற்றைப் பற்றி மனதில் சிந்திப்பதால் தன்னை அடக்கவும், ஒழுங்காக நடக்கவும் முயற்சிப்பான். உடலின் வலியானது தூங்கி எழுந்ததும் காணாமல் போய்விடும். ஆனால் மனதில்ல் உரைக்கும் அடிகளோ உயிருள்ள வரை வலியை ஏற்படுத்தும். ஆகவே புத்திமான்களாக இருந்து பிறரது வார்த்தைகளிலேயே நம்மை மாற்றிக் கொள்கிறவர்களாக வாழ்வோம்.

வார்த்தைகளுக்கே உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால் நமது மனசாட்சியானது ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்பட்டதாக, தினமும் வேதம் மற்றும் ஜெபத்தால் கூராக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.


சிந்தனை : ஆலோசனைகளைக் கேட்பது அடிகளைத் தவிர்க்கும்.


ஜெபம் : தேவனே உமது வார்த்தைகளால் என்னை புத்திமானாக்கும். உம் பெயரை உடைய நான் உமக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும்படி அடிகள் வாங்காதவனாக இருக்க கிருபை தாரும். ஆமென்.


For Audio Tracks visit : DD-Tamil

For Older Posts visit : http://dropindeocean.blogspot.com/
--
http://micyell.com
micyellmedia@gmail.com
Mobile : 09994258788

No comments: